Sunday, 16 December 2012

திரைகடல் ஓடினாய் திரவியம் தேட
தேடி சென்ற  உன்னை மீண்டும் நாங்கள் தேட!

Monday, 10 December 2012





"ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மொதிக்கொண்டால்
காதல்"
             - நா.முத்துகுமார்

                                     

"உடைவேன் என்று தெரிந்தும்
கல்லுக்காய் காத்திருக்கும்
கண்ணாடியாய் நான்"
"பத்து உயிர்களை
வயிற்றில் சுமக்கும் வலி தோற்கும்,
உன் ஒருவனை
மனதில் சுமக்கும் எனக்கு"

" ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே...
  என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே ! "
                                    - தாமரை




" என் மனதோடு என்ன விளையாட்டோ ?
  உடைத்து மட்டும் விடாதே...!
  வலிக்கும்...
  அதில் முழுமயாய் வியாபித்திருக்கும் உனக்கு!"


தன்னை எவ்வளவு பிடிக்கும்
என்ற அனைவரது கேள்விக்கும்
குழந்தைபோல் கையை நீட்டி
விரித்து காட்டினாய்...

என் வாய்ப்பும் வந்தது...

கைகளை சுருக்கி வந்தாய்
பதறினேன்...!
ஆனால்,
சுருக்கிய கைகளுக்கிடையில்
சிக்கியிருந்தேன் நான்!




" குதூகலம்தான் ஞாயிறு
நாளை செய்யவிருக்கும்
வீட்டுபாடம் நினைவு
வரும் வரை! "
"தினமும் காலை
நீ அலுவலகம் கிளம்ப,
உன் சட்டை பொத்தான்
நான் போட;
நிமிர்ந்த என் விழிகளும்
குனிந்த உன் விழிகளும்
சிக்கிக் கொள்ளும் தருணம் தோன்றும்
ச்ச...! சட்டையில்
இவ்வளவு தான் பொத்தான்களா?"



"சிக்கயது பொத்தான்கள்
மட்டும் அல்ல
என் விழிகளும் தான்!"



"காண்போம் கற்போம்
நேற்று வரை ...
உன் விழி நோக்கிய பின்
காண்போம் கண்டுகொண்டே இருபோம்...! "
" உன் ஆழப்பார்வையில்
விழுந்து வெளி வந்து
உன் அடர்ந்த புருவங்களில்
தொலைந்து பொகிறேன்"



"வானவில் பார்த்தேன்
சொல்ல  வேண்டும் உனக்கு...
எங்குள்ளாய நீ...?
வில்லின் மறுமுனையிலா?"



" கனவில் இசையரங்கமா?
   அழகாகத்தான் தலையசைக்கிறாய் !"



" முழுமைபெறாத ஓவியம்
   என் உள்ளங்கை ரேகைகள்...
   முழமைபெறும்
    உன் கைரேகைளோடு!"



"வார்தைகள் நிரப்பப்படாத
 என் காதல் கவிதை...
 நிரம்பியது!
 வார்த்தைகளாய் நீ...!"
Wednesday, 9 February 2011


கோடிட்ட  இடத்தை நிரப்பு:
கோடிட்ட இடம்...
என் இதயம்!
கூடல்...


உடல்...படல்... கடல்...
தொடல்... கெடல்... விடல்...



" குவளை  நீரென
  பொய்யுரைத்தாய்...!
  மூழ்கியவன் நான்,
  தொலைந்துபோனேன்...
  உன் நினைவுகளில்
முட்டிக்கொள்வேன் என்றறிந்தும்
முட்டுச்சந்துக்குள்
நுழைந்தவள் நான்!

Wednesday, 5 December 2012



எழுதுகிறேன்
என் காதல் கதை...
முதல் சொல்;
'முற்றும்'